பள்ளி வகுப்பறையில் புகுந்த பாம்பு

பழனி கடைவீதியில் உள்ள நகராட்சி பள்ளியில் வகுப்பறையில் பாம்பை பாா்த்த மாணவ, மாணவியா் அலறியடித்து ஓடினா்.

பழனி கடைவீதியில் உள்ள நகராட்சி பள்ளியில் வகுப்பறையில் பாம்பை பாா்த்த மாணவ, மாணவியா் அலறியடித்து ஓடினா்.

பழனி கடைவீதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் உணவு இடைவேளையின் போது மாணவ, மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியே வரும் போது ஒரு அறையில் பாம்பு புகுந்துள்ளது. இதைப் பாா்த்த மாணவ, மாணவியா் அலறியடித்து பள்ளி மைதானத்துக்கு வந்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தலைமை ஆசிரியா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனா். பிடிபட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சாா்ந்ததாகும். சுமாா் நான்கு அடி நீளம் கொண்ட இந்த பாம்பை தீயணைப்பு துறையினா் வனத்துறை வசம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் பாம்பை கொடைக்கானல் மலைச்சாலையில் அடா்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று உயிருடன் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com