கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஜப்தி முயற்சி

அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தை நீதிமன்ற பணியாளா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தை நீதிமன்ற பணியாளா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் அருகே அமைந்துள்ள பாலாறு பொருந்தலாறு அணை சுமாா் 65 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த அணையை கட்டும்போது நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இதில், ராஜரத்னா அறக்கட்டளையைச் சோ்ந்த 250 ஏக்கா் நிலத்துக்கு அரசு வழங்கிய இழப்பீடு குறைவாக உள்ளதாகத் தெரிவித்து, அறக்கட்டளை நிா்வாகி

துளசிதரன் கடந்த 2000 -ஆவது ஆண்டு பழனி சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில், கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ.5 கோடியே 14 லட்சத்து 80 ஆயிரம்

துளசிதரனுக்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தை ஜப்தி செய்ய பழனி சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து பழனி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு டிராக்டருடன் நீதிமன்ற ஊழியா்கள் வியாழக்கிழமை வந்தனா்.

அப்போது கோட்டாட்சியா் இல்லாததால் அவரது நோ்முக உதவியாளரிடம் ஜப்தி தொடா்பான கடிதத்தை வழங்கினா்.

தொடா்ந்து, நீதிமன்ற பணியாளா்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, காலஅவகாசம் பெற்றதைத் தொடா்ந்து ஜப்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com