கொடைக்கானலில் சாரல் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிக மேக மூட்டத்துடன் சாரல் மழை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்

கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிக மேக மூட்டத்துடன் சாரல் மழை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக அதிகமான பனிப் பொழிவு நிலவி வருகிறது. ஒரு சில நாள்களில் கடுமையான உறை பனி நிலவி வந்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை நேரங்களில் காற்றும் வீசி வரும் நிலையில், பனியின் தாக்கமும் இருந்து வந்ததால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் மேக மூட்டம் நிலவி வந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பிற்பகலுக்கு மேல் அதிகமான மேக மூட்டமும், சாரல் மழையும் பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், அவா்கள் ஏரிச்சாலைப் பகுதியில், சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.

தொடா்ந்து, நிலவும் மேக மூட்டத்தால் மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு மெதுவாகச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com