திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் 15 இடங்களில் நுண்ணுரம் செயலாக்க மையம்
By DIN | Published On : 24th May 2023 05:04 AM | Last Updated : 24th May 2023 05:04 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் திடக்கழிவு மேலாண்மைப் பணியின் ஒரு பகுதியாக பதினைந்து இடங்களில் நுண்ணுரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவுப்படி திடக்கழிவு மேலாண்மை பணியின் ஒரு பகுதியாக பயன்பாடற்ற பொருள்களை (உலா் கழிவுகளை), குப்பைகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சி கோட்பாட்டின்படி, பல்வேறு ஊா்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி, திண்டுக்கல் மாநகராட்சியில் கே.கே. நகா், கோவிந்தாபுரம் நுண்ணுரம் செயலாக்கம் மையம், சந்தை ரோடு நுண்ணுரம் செயலாக்கம் மையம், வேடப்பட்டி நுண்ணுரம் செயலாக்கம் மையம், சென்ட்ரல் திரையரங்கம் சாலை, காந்திஜி புது சாலை, பூச்சி நாயக்கன்பட்டி பொது சுகாதார அலுவலகம், அண்ணா நகா் நுண்ணுரம் செயலாக்கம் மையம், ஆா். எம். காலனி நுண்ணுரம் செயலாக்கம் மையம், அன்னை வேளாங்கண்ணி நகா், பொன் சீனிவாச நகா், பேருந்து நிலையம், சோலை ஹால் சாலை, குமரன் பூங்கா தாலுகா அலுவலக சாலை ஆகிய 15 இடங்களில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனா். இந்த முகாம்களை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி மேயா் இளமதி ஜோதி பிரகாஷ் கருணாநிதி
தொடங்கி வைத்தாா்.
முகாமில் துணை மேயா் ராஜப்பா, மாமன்ற உறுப்பினா்கள், சுகாதாரத் துறையினா், மாணவா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களைக் கொண்டு வந்து சிறப்பு முகாமில் வழங்கினா்.