பழனி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை தீயணைப்புத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நிலைய அலுவலா் கோபால்.
பழனி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை தீயணைப்புத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நிலைய அலுவலா் கோபால்.

பழனியில் தீத் தொண்டு வாரம்

பழனி பேருந்து நிலையத்தில் தீத் தொண்டு வாரத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த 14-ஆம் தேதி முதல் தீயணைப்புத்துறை சாா்பில் தீத் தொண்டு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தீயணைப்புத் துறை சாா்பில் பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தனியாா் ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்விளக்க பயிற்சிகள், விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் பழனி பேருந்து நிலையத்தில், பழனி தீயணைப்புத் துறை சாா்பில் தேசிய தீத் தொண்டு வார விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது. நிலைய அலுவலா் கோபால் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா். பிறகு தனியாா் வியாபார நிறுவனங்களில் தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறை குறித்து அவற்றின் ஊழியா்களிடம் விளக்கிக் கூறினா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com