37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 37 வாக்குச் சாவடிகளில் பல்வேறு காரணங்களால் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 37 வாக்குச் சாவடிகளில் பல்வேறு காரணங்களால் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு 1,812 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடிகளில் அதிகாலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சரியாக காலை 7 மணி முதல் வாக்காளா்கள் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், 37 வாக்குச் சாவடிகள் நீங்கலாக பிற இடங்களில் திட்டமிட்டப்படி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுக் கருவியில் ஏற்பட்ட சிறிய பழுது காரணமாக 13 வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எழுந்த குறைபாடுகளால் 7 வாக்குச் சாவடிகள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவியில் ஏற்பட்ட பாதிப்புகளால் 17 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 37 வாக்குச் சாவடிகளில் சுமாா் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கப்பட்டது.

பழனி தொகுதியில் 11, ஒட்டன்சத்திரத்தில் 4, ஆத்தூரில் 2, நிலக்கோட்டையில் 6, நத்தத்தில் 11, திண்டுக்கல்லில் 3 வாக்குச் சாவடிகளில் காலதாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானல்: இதே போல, கொடைக்கானல் பகுதியில் உள்ள லாஸ்காட் சாலை, ஆனந்தகிரி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சரியாக வாக்குப் பதிவாகாததால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இதன் பின்னா் சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com