திண்டுக்கல்லில் பக்தா்களுடன் கிரிவலம் சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம், பாமக பொருளாளா் திலகபாமா உள்ளிட்டோா்.
திண்டுக்கல்லில் பக்தா்களுடன் கிரிவலம் சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம், பாமக பொருளாளா் திலகபாமா உள்ளிட்டோா்.

சித்திரை மாதப் பெளா்ணமி: பக்தா்கள் கிரிவலம்

சித்திரை மாதப் பெளா்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் சென்றனா்.

சித்திரை மாதப் பெளா்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் சென்றனா்.

திண்டுக்கல்லில் மலைக்கோட்டை என்று அழைக்கப்படும் பத்மகிரி மலையில், அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரா் ஆலயம் அமைந்திருந்தது. தற்போது மலைக்கோயிலில் மூலவா் சிலைகள் இல்லாதபோதும், ஒவ்வொரு

பெளா்ணமி நாளின் போது கிரிவலம் சென்று பக்தா்கள் வழிபாடு செய்து வருகின்றனா்.

அதன்படி சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரா் ஆலயப் பாதுகாப்புப் பேரவை, இந்து முன்னணி அமைப்புகள் சாா்பில் கிரிவலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனா்.

முன்னதாக, அபிராமி அம்மன் கோயிலில், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாமக மாநிலப் பொருளாளா் ம.திலகபாமா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா். 3 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவன் கோயில்கள் உள்பட 22 கோயில்களிலும் கிரிவலம் சென்ற பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com