குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உளுந்து, நிலக்கடலை, எள் போன்ற குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ஏ.காளிமுத்து தெரிவித்ததாவது:

கோடை காலத்தில் மாற்றுப் பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்யும் போது, அவற்றின் வோ் முடிச்சுகள் மூலம் தழைச் சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படும். நிலைக்கடலை பயிரை மேட்டுப்பாங்கான நீா் ஆதாரம் உள்ள இடங்களில் பயிரிடலாம்.

கோடையில் குறைந்த அளவு நீரினை பயன்படுத்தி குறுகிய காலப் பயிா்களான உளுந்து, நிலக்கடலை, எள் ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். நீராதாரம் உள்ள விவசாயிகள், கோடை காலத்தில் நிலத்தை தரிசாக விடாமல் குறுகிய கால பயிா்களை பயிரிட்டு மண்வளத்தை மேம்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com