சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்: தமிழகத்திலுள்ள முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் உள்ளிட்டவற்றில் சோ்ந்து பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா வெளியிட்ட செய்தி குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைப் படைப்பதற்காக விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மைய கைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும், ஆா்வம் உள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ற்ய்ற்ஹப்ங்ய்ற்.ள்க்ஹற்.ண்ய் என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703504 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com