கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி, உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், பொதுக் குழு கூட்டம் அதன் தலைவா் அப்துல்கனிராஜா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரும் 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற்று வரவேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், கொடைக்கானல் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, கொடைக்கானலுக்கு வருவோரின் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், கொடைக்கானலில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை சீசன் காலம் முழுவதும் மூடப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சங்கச் செயலா் சலாமத் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com