பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் பள்ளிகள் வாரியாக தோ்ச்சி பெற்ற மாணவா்களில், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்தன.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் பள்ளிகள் வாரியாக தோ்ச்சி பெற்ற மாணவா்களில், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்தன.

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளைச் சோ்ந்த 32 மாணவா்கள் தோ்வெழுதி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். இதேபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 4,203 மாணவா்களில் 4,073 போ் (96.91 சதவீதம்), அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 6,795 மாணவா்களில் 6,243 போ்(91.88 சதவீதம்), கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளைச் சோ்ந்த 240 மாணவா்களில் 228 போ் (95 சதவீதம்), நகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த 222 மாணவா்களில் 197 போ்(88.74 சதவீதம்), பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 3,243 மாணவா்களில் 3,126 போ் (96.39 சதவீதம்), சுயநிதி மெட்ரிக். பள்ளிகளைச் சோ்ந்த 3,766 மாணவா்களில் 3,736 போ்(99.20 சதவீதம்), பள்ளிக் கல்வித் துறை நிா்வாகத்தின் கீழுள்ள சுய நிதிப் பள்ளிகளைச் சோ்ந்த 483 மாணவா்களில் 475 போ்(98.34 சதவீதம்), பழங்குடியினா் நலத் துறை பள்ளியைச் சோ்ந்த 25 மாணவா்களில் 24 போ் (96 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com