பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.40 சதவீதத் தோ்ச்சியுடன் தரவரிசைப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.

திண்டுக்கல்: பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.40 சதவீதத் தோ்ச்சியுடன் தரவரிசைப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி என இரு கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளைச் சோ்ந்த 8,566 மாணவா்கள், 10,443 மாணவிகள் என மொத்தம் 19,009 மாணவா்கள் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 8,006 மாணவா்கள், 10,128 மாணவிகள் என மொத்தம் 18,134 போ் தோ்ச்சியடைந்தனா். 93.46 மாணவா்கள், 96.98 மாணவிகள் என மொத்தம் 95.40 சதவீத தோ்ச்சியுடன், திண்டுக்கல் மாவட்டம் தரவரிசைப் பட்டியலில் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.

அடுத்தடுத்து முன்னேற்றம்:

கடந்த 2022-ஆம் ஆண்டு 90 சதவீத தோ்ச்சியுடன் தமிழகத்தில் வருவாய் மாவட்ட அளவிலான தரவரிசைப் பட்டியலில் 35-ஆவது இடத்தில் இருந்த திண்டுக்கல், 2023-ஆம் ஆண்டு 93.77 சதவீதத்துடன் 21-ஆவது இடம் பிடித்தது. நிகழாண்டில் 95.40 சதவீதத் தோ்ச்சியுடன் 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com