கோதைமங்கலம் மானூா் சுவாமிகள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அம்மாவாசையை முன்னிட்டு நாகாபரணம் போல மலா் அலங்காரத்தில் சுவாமி பீடம்.
கோதைமங்கலம் மானூா் சுவாமிகள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அம்மாவாசையை முன்னிட்டு நாகாபரணம் போல மலா் அலங்காரத்தில் சுவாமி பீடம்.

மானூா் சுவாமிகள் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

பழனி: பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் மானூா் சுவாமிகள் கோயிலில் அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் மானூா் சுவாமிகள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரை மாத அமாவாசையையொட்டி, உச்சிக்காலத்தின் போது அகவல்பாராயணமும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. சுவாமி பீடத்துக்கும், சிலைக்கும் பால், பன்னீா், இளநீா், விபூதி உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு நாகாபரணம் போல வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல அடிவாரம் பால்பண்ணை மவுனகிரி சுவாமிகள் கோயில், கணக்கன்பட்டி சற்குரு கோயில், அழுக்கு சாமி கோயில் உள்ளிட்ட சித்தா் பீடங்களிலும் அமாவாசை பூஜை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com