கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்ட வெள்ளி நீா்வீழ்ச்சிப் பகுதி.
கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்ட வெள்ளி நீா்வீழ்ச்சிப் பகுதி.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானலில் இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.

ஊட்டி,கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ பாஸ் பெற வேண்டும் என சென்னை உயா்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், வெள்ளி நீா்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், மோயா் பாயிண்ட், ஃ பைன் பாரஸ்ட், குணாகுகை,பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.

இ பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் நகா்ப் பகுதி, புகா்ப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கும் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. பேச்சுவாா்த்தை மூலம் இதற்கு தீா்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com