தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேசன் நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான மாறு வேடப்போட்டி நடைபெற்றது. ஸ்மார்ட் கிட்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார். பள்ளி மேலாளர் மோகன் முன்னிலை விகித்தார். இதில் குழந்தைகள் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வந்து பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளிலும் சிரிப்பு, நாடகம், சுகாதாரம், சுற்றுபுற சுழல் தொடர்பான பல்சுவை நிகழ்சிகளிலும் பங்கேற்றனர். பள்ளியின் முதல்வர் மருத்தாச்சல பூபதி வரவேற்றார். ஆசிரியை கவிதா நன்றி தெரிவித்தார்.