பரமக்குடி வட்டத்தில் நவ.30-க்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

பரமக்குடி வட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும் என வேளாண்மை அலுவலர் ச.சிவராணி தெரிவித்தார்.

பரமக்குடி வட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும் என வேளாண்மை அலுவலர் ச.சிவராணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் பருவமழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது பயிர் பாதுகாப்பிற்கு காப்பீடு செய்ய வேண்டும். இதற்கான பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.340.50 செலுத்த வேண்டும். இத்தொகையானது காசோலையாக செலுத்தாமல் ரொக்கமாக அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இ-சேவை மையங்களில் செலுத்தலாம்.  
 பாதகமான பருவமழை, வெள்ளம், கடும் வறட்சி ஏற்படும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் கிராமத்தின் உத்திரவாத மகசூல் 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருக்கும் என்ற நிலை இருப்பின் மாநில மற்றும் மாவட்ட பயிர்க் கண்காணிப்பு குழுவின் பரிந்துரைப்படி இழப்பீடு வழங்கப்படும். 
காப்பீடு செய்த விவசாயிகள் பயிரை அறுவடை செய்த பின், அறுவடை செய்த பயிரை நிலத்தில் பரப்பி வைத்த பின் அல்லது பரப்பி வைக்கும் தருணத்தில் சூறாவளிக் காற்று, சூறாவளிக் காற்றுடன் கூடிய மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு பெற முடியும். 
 பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்களான விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தில் அடையாளம் மற்றும் முகவரிச் சான்று ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியனவற்றில் தேவையான சான்றினை வழங்கி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com