கஜா' புயலின் தாக்கம்: சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி ராமேசுவரம்

கஜா' புயல் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி ராமேசுவரம் காணப்பட்டது.

கஜா' புயல் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி ராமேசுவரம் காணப்பட்டது.
ராமேசுவரத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்வர். ஆனால் கஜா' புயல் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வர்த்தக நிறுவனங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி பாதிக்கப்பட்டன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வேலையிழந்துள்ளனர். மீண்டும் சகஜ நிலை எப்போது திரும்பும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com