ராமேசுவரத்தில் கடைகள் அடைப்பு; 1800 விசைப்படகுகள் நிறுத்தம்

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை பொது வேலை நிறுத்தம் காரமணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை பொது வேலை நிறுத்தம் காரமணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.1800- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 
இதனால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் 1800- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. ராமநாதசுவாமி திருக்கோயில் பகுதிகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முதுகுளத்தூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முதுகுளத்தூர்-தேரிருவேலி முக்கு ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பூவலிங்கம், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, திமுக நகரச் செயலாளர் ஷாஜகான், காங்கிரஸ் நகர் தலைவர் என்.சுரேஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர் துணைத் தலைவர் பாசில் அமீன், தமுமுக மாவட்ட தலைவர் முகம்மதுஇக்பால்,மாவட்ட பொருளாளர் வாவாராவுத்தர்,தூவல் அழகர், சுந்தர்ராஜ், சப்பாணி, உதயகுமார், மதியழகன்,  வட்டார தலைவர்கள் புவனேஸ்வரன், ராமர், சிவபிரதாப் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com