இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை மீட்கக் கோரி மனைவி மனு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என பெண் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தார். 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா செய்யாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமு (50). மீனவரான இவர், கடந்தாண்டு நவம்பர் மாதம் ராமேசுவரம் அருகே சக மீனவர்களுடன் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர்களை சுற்றிவளைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தற்போது இலங்கை சிறையில் இருக்கும் மீனவர் ராமுவை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி பாக்கியம்,  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தார். 
அப்போது அவர் கூறியது: எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கணவருடன் மேலும் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எனது கணவர் ஓராண்டுக்கு மேலாக இலங்கைச் சிறையில் இருப்பதால் செய்வதறியாது இருக்கிறோம். ஆகவே அவரை மீட்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com