160 பேருக்கு 3 மாத நிலுவை முதியோர் உதவித்தொகை கிடைத்தது: பயனாளிகள் மகிழ்ச்சி

கமுதி அருகே 160-க்கு மேற்பட்ட முதியோர்களுக்கு, 3 மாதமாக நிலுவையில் இருந்த மாதந்திர

கமுதி அருகே 160-க்கு மேற்பட்ட முதியோர்களுக்கு, 3 மாதமாக நிலுவையில் இருந்த மாதந்திர உதவிதொகை வழங்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் மகழ்ச்சியடைந்துள்ளனர்.
கமுதி தாலுகாவில் உள்ள மண்டலமாணிக்கம், எழுவனூர், கூடக்குளம், வலையபூக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 160 -க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, 3 மாதங்களாக முதியோர்களுக்கு உதவி தொகை வழங்கப்படாமல் இருந்தது. இதனால் கூலி வேலைகளுக்குகூட செல்ல முடியாத முதியோர்கள், வருவாயின்றி உணவுக்காக அருகிலுள்ளவர்களிடம் கையேந்தும் அவலம் ஏற்பட்டது. 
இந்நிலையில், மண்டலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த10 க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் தொடர்ந்து 10 நாள்களாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முதியோர் உதவி தொகை பெற உணவு, தண்ணீரின்றி அலைந்த வண்ணம் இருந்தனர்.  
இதுகுறித்து கடந்த 21 ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. 
இதனையடுத்து கமுதி சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்ததன்பேரில், மாதாந்திர உதவித் தொகை பெறும் முதியோர்களுக்கு நிலுவைத்தொகை அவர்களது அஞ்சலக சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் மண்டல மாணிக்கம், எழுவனூர், கூடக்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள பயனாளிகள் மகழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com