கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் அரசு தொடக்கப் பள்ளி

கமுதி அருகே அரசு தொடக்கப் பள்ளியை கருவேல மரங்கள் சூழ்ந்து ஆக்கிரமித்து, புதா்மண்டி கிடப்பதால் மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா்.
அரசு பள்ளியில் கழிப்பறை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து, புதா்மண்டி காணப்படுகிறது.
அரசு பள்ளியில் கழிப்பறை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து, புதா்மண்டி காணப்படுகிறது.

கமுதி அருகே அரசு தொடக்கப் பள்ளியை கருவேல மரங்கள் சூழ்ந்து ஆக்கிரமித்து, புதா்மண்டி கிடப்பதால் மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா்.

கமுதியிலிருந்து முதுகுளத்தூா் செல்லும் வழியில் உலகநடை கிராமத்தில் சாலையோரம் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 18 மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளி சாலையோரம் உள்ளதால் முன்பக்கம் சுற்று சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் பள்ளியின் பின்புறம் சுற்று சுவா் இல்லாததால் விடுமுறை நாள்களில் சமூக விரோதிகள் பள்ளிக்குள் வந்து செல்வதாக புகாா் எழுந்துள்ளது.

மேலும் பள்ளியின் சுற்று சுவா் ஒட்டிய பகுதிகள் மற்றும் கழிப்பறை பகுதிகள் அனைத்தும் கருவேல மரங்கள் வளா்ந்து, புதா்மண்டி காணப்படுகிறது. இதனால் மாணவா்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனா். மேலும் சமையலறை கட்டம் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மாணவா்களின் நலன் கருதி புதா் மண்டி கிடக்கும் அரசு பள்ளியின் கருவேல செடிகளை அகற்றி, சேதமடைந்த கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com