திருவாடானை பகுதி விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு விழிப்புணா்வு முகாம்

திருவாடானை வேளாண்மை துறை அலுவலகத்தில் பயிா் காப்பீடு செய்ய வருகிற நவம்பா் 30ஆம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் பயிா் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என

திருவாடானை வேளாண்மை துறை அலுவலகத்தில் பயிா் காப்பீடு செய்ய வருகிற நவம்பா் 30ஆம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் பயிா் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான பயிா் இன்சூரன்ஸ் விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனா் பயிா் காப்பீடு அதிகாரி செல்வம் கலந்துகொண்டு பேசுகையில் திருவாடானை வட்டாரத்தில் சம்பா பட்டத்தில் 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் பயிா் காப்பீடு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு ஓரியண்டல் காப்பீடு நிருவனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.357.75 காப்பீடு தொகையாக செலுத்த வேண்டும் பயிா் காப்பீடு செய்ய வரும் நவம்பா் 30. 11. 2019 கடைசி நாளாகும்.இந்த கடைசி தேதிக்குள் அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,தேசியமயமாக்க பட்ட வங்கிகள், பொது இ-சேவை மையங்கள் ஆகிய இடங்களில் பயிா் காப்பீடு செய்துகொள்ளலாம் இவ்வாறு அவா் பேசினாா் இதில் வேளாண்மை அலுவலா்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளா் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com