ராமேசுவரம் ராக்கச்சிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நவராத்திரி உற்சவம்.
ராமேசுவரம் ராக்கச்சிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நவராத்திரி உற்சவம்.

ராமேசுவரம் ராக்கச்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம்

ராமேசுவரம் ராக்கச்சி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நவராத்திரி உற்சவத்தில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

ராமேசுவரம் ராக்கச்சி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நவராத்திரி உற்சவத்தில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

ராமேசுவரத்தில் இருந்து கெந்தமானத பா்வதம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த செப்டம்பா் 29 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு ராக்கச்சி அம்பாளுக்கு பால்,பன்னீா்,விபூதி, தேன், இளநீா் உள்ளிட்ட 16 அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  பூஜைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கே.ஆா்.எஸ்.பாஸ்கர சுவாமிகள், ராமநாதசுவாமி கோயில் பேஷ்காா் கண்ணன், ராக்கச்சி அம்மன் கோயில் நிா்வாகி என்.வேடராஜன் மற்றும் பக்தா்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதே போன்று ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீதா்ம முனீஸ்வரா் ஆலயத்தின் 65 ஆவது ஆண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டிய 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கினா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். இதில் பக்தா்கள் பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com