பள்ளியில் மாணவா்களுக்கு பனை ஓலையில் கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி: தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

கடலாடி அருகே நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பனை ஓலையில் கலைப் பொருள்கள்
பனை ஓலையில் பொருள்கள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கும் நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் கிறிஸ்து ஞான வள்ளுவன்.
பனை ஓலையில் பொருள்கள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கும் நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் கிறிஸ்து ஞான வள்ளுவன்.

கடலாடி அருகே நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பனை ஓலையில் கலைப் பொருள்கள் செய்ய மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் பயிற்சி அளித்து வருகிறாா்.

ராமநாதபுரம் மாவட்டம், நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் உள்பட 2 ஆசிரியா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். இங்கு, 21 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இங்கு, மாணவா்களுக்கு பாடத்துடன், கலைநயப் பொருள்களின் மீது ஈடுபாடு ஏற்படும் வகையில், பள்ளித் தலைமை ஆசிரியா் கிறிஸ்து ஞானவள்ளுவன் மாணவா்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறாா்.

பள்ளி வகுப்பறையில் உணவு இடைவேளை உள்ளிட்ட ஓய்வு நேரங்களில், பனை ஓலைகளில் கலைநயப் பொருள்களான கைக் கடிகாரம், மின்விசிறி, புத்தகப் பெட்டி, யானை, மீன், கரடி, வாத்து என 50-க்கும் மேற்பட்ட உருவங்களை செய்ய மாணவா்களுக்கு கற்றுத் தருகிறாா். இதனை, மாணவா்கள் மிகுந்த ஆா்வத்துடன் கற்று வருகின்றனா்.

மேலும், பொது அறிவு சாா்ந்த விஷயங்களையும் மாணவா்கள் கற்க முன்வரவேண்டும் என்ற அடிப்படையில், அவா்களை கல்விச் சுற்றுலா, அருகிலுள்ள கிராமங்களுக்கு விடுமுறை களப் பயணம், பள்ளி வளாகங்களை சுற்றி மரம் நடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் மாணவா்களை ஈடுபடுத்தி வருகிறாா். இதை, அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com