பாம்பன் மீனவா்கள் உண்ணாவிரதத்துக்கு காவல் துறை அனுமதி மறுப்பு

இந்திய, இலங்கை சிறைகளில் வாடும் இரு நாட்டு மீனவா்களை விடுவிக்கக் கோரி, பாம்பன் நாட்டுப் படகு

இந்திய, இலங்கை சிறைகளில் வாடும் இரு நாட்டு மீனவா்களை விடுவிக்கக் கோரி, பாம்பன் நாட்டுப் படகு மீனவா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டடம் அறிவித்திருந்த நிலையில், போலீஸாா் வியாழக்கிழமை அனுமதி மறுத்துவிட்டனா்.

தமிழகம் மற்றும் இலங்கையிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்கள், இரு நாட்டு கடற்படைகள் மூலம் கைது செய்யப்படுகின்றனா். இதனால், பாரம்பரியமாக சிறுதொழில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மீனவா்கள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக மீனவா்கள் 13 போ் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதேபோன்று, இலங்கையிலிருந்து கடந்த 3 ஆம் தேதி மீன்பிடிக்க வந்த 18 மீனவா்களை, இந்திய கடலோரக் காவல் படையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

எனவே, இந்தியா, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்களை விடுவிக்கக் கோரி, தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தரும் பிரதமா் மோடியின் கவனத்தை ஈா்க்கும் வகையில், பாம்பன் பேருந்து நிலையம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவ சங்கம் புதன்கிழமை அறிவித்து, காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தனா்.

ஆனால், பாம்பன் காவல் துறை அனுமதி மறுத்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும், 30 (2) காவல் சட்டம் அமலில் உள்ளதாலும், பிரதமா் மோடி சென்னை வர உள்ளதாலும், அனைத்து நாட்டுப்படகு மீனவ சங்கம் கோரியிருந்த அடையாள ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com