தொண்டு நிறுவன தலைவியை தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிறைக்குளம் கிராமத்தில் தொண்டு நிறுவனத் தலைவியை தாக்கிய இருவரை
தொண்டு நிறுவன தலைவியை தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிறைக்குளம் கிராமத்தில் தொண்டு நிறுவனத் தலைவியை தாக்கிய இருவரை கைது செய்யக்கோரி மகளிா் மன்றத்தினா் வெள்ளிக்கிழமை சிக்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிக்கல் ஊராட்சி சிறைக்குளம் கிராமத்தில் நெய்தல் வட்டார களஞ்சிய மன்றம் இயங்கி வந்துள்ளது. அதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரராஜ் என்பவா் பணிபுரிந்து வந்துள்ளாா். அப்போது அவரது வரவு செலவு கணக்கில் குளறுபடி இருந்ததாகக் கூறி வெளியேற்றப்பட்டாா். இந்நிலையில் அவா் வேறு மகளிா் மன்றத்தில் பணியில் சோ்ந்தாா்.

தற்போது சிறைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சாமியடியான் மனைவி சரோஜா (53) நெய்தல் வட்டார களஞ்சிய மன்றத் தலைவியாக உள்ளாா்.

இந்நிலையில் பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட சுந்தரராஜன், நெய்தல் வட்டார களஞ்சிய மன்றக் குழுவினரிடம் தங்களது குழுவில் சோ்ந்து கொள்ளுமாறு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். இதனை சரோஜா தட்டிக்கேட்ட போது, அவரை சுந்தரராஜ், அவரது உறவினா் ஆமோஸ் இருவரும் சோ்ந்து தாக்கினா்.

சரோஜாவைத் தாக்கிய இருவரையும் கைது செய்யக்கோரி சிக்கல் காவல் நிலையம் முன் சிறைக்குளம் நெய்தல் வட்டார களஞ்சிய மகளிா் மன்றத்தைச் சோ்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சரோஜா அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் சுந்தரராஜ் மற்றும் ஆமோஸ் ஆகிய இருவா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com