100 நாள் வேலை திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி பொய் பிரசாரம்

நூறு நாள் வேலை திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி பொய் பிரசாரம் செய்து வருகிறது என்றார் குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய

நூறு நாள் வேலை திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி பொய் பிரசாரம் செய்து வருகிறது என்றார் குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன். 
ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில்,  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை 99,952 பேருக்கு குமரி மாவட்டத்தில் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டு பணிகள்  நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் ரூ.163- ஆக இருந்த இவர்களுடைய ஊதியம், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ரூ. 229-ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 100  நாள் வேலை உறுதித் திட்டம், 150 நாள்களாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் மறைத்து, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ரத்துசெய்யப்படும் என்ற பொய்யான தகவலை கிராமங்களில் தொடர்ந்து பரப்பி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com