கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை (விகாரி) பிறப்பை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை (விகாரி) பிறப்பை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
ராமநாதபுரம் நகரிலுள்ள சிவன் கோயில், அனுமார் கோயில், வழிவிடு முருகன் கோயில், ஓம்சக்தி நகர், செட்டியத் தெரு உள்ளிட்ட பகுதி கோயில்களிலும், ஊரகப் பகுதிகளில் திருப்புல்லாணி, தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை உள்ளிட்ட பிரசித்தி பெற்ற  கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 
மாவட்ட அளவில் அழகன்குளம், பரமக்குடி, தொண்டி, அபிராமம், ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  
அதேநேரம், கிராமப்புறங்களில் ஏர்களை வைத்து விவசாயிகள் வழிபட்டனர். மேலும், நாட்டுக் கருவேல மரங்களில் தார்க்குச்சி செய்து அதில் மஞ்சள் தடவி வழிபட்டனர். சில ஊர்களில் விவசாயிகள் வயலுக்குச் சென்று உழுது வழிபாடு நடத்தினர்.  
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு மாதப் பிறப்பையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் சிவன் கோயில், ராமேசுவரம் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் மாலையில் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com