கார் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் தப்பினார்

கமுதி அருகே புதன்கிழமை டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.

கமுதி அருகே புதன்கிழமை டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
 திருநெல்வேலியை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் கமுதியிலிருந்து அபிராமம் நோக்கி தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே டயர் வெடித்து, கார் தலைகுப்புற கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில் காயமின்றி தப்பிய கண்ணன், காரை விட்டுவிட்டு, தப்பியோடினார். 
இதனால் விபத்துக்குள்ளான காரில் பணம் ஏதும் கடத்தப்பட்டதா என, கமுதி போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இதுகுறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com