சுதந்திர தின விழா: பாம்பன் ரயில் பாலத்தில்  துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு

நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி பாம்பன் ரயில் பாலத்தில்

நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் செவ்வாய்க்கிழமை முதல் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். 
நாட்டின் 73 வது சுந்திர தினம் வரும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (வியாழக்கிழமை)  கொண்டாடப்படுகிறது.  இதனையடுத்து, முக்கிய பகுதியாக உள்ள பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் செவ்வாய்க்கிழமை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாலத்தில் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ரயில் நிலையங்களில் ரயில்களில் வரும் பயணிகளின் ரகசிய காவல்துறையினர் மூலம் காண்காணிப்படுகின்றனர். 
இதே போன்று பாம்பன் பேருந்து பாலம் வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லும்  பக்தர்களின் உடைமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கின்றனர்.
மேலும் செல்லிடப்பேசி, பேட்டரி உள்ளிட்ட பொருள்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம் கடற்கரை பகுதியில்  இந்திய கடற்படை, கடலோரகாவல்படை, கடலோர காவல்துறை மற்றும்  உளவுத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.  ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் முழுமையான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கபடுகிறது.

900 போலீஸார் பாதுகாப்பு
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா செவ்வாய்க்கிழமை கூறியது: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் ரயில் பாலம், வாகனப் போக்குவரத்து பாலம் மற்றும் ரயில் நிலையங்கள், ஏர்வாடி தர்ஹா, கிறிஸ்தவ முக்கிய வழிபாட்டுத் தலங்கள், கோயில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
 மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் பிரிவில் இருந்து 120 சிறப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மற்றும் ஆயுதப்படைப் பிரிவினர், ஊர்க்காவல் படையினர் என அனைத்து காவல்துறை சார்ந்த பிரிவுகளும் பாதுகாப்புப் பணியிலும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவுக்கு மட்டும் மொத்தம் 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தண்டவாளங்கள் கண்காணிக்கப்பட்டு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவு, பகலாக ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com