ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியின் புதிய ஆணையராக என்.விஸ்வநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியின் புதிய ஆணையராக என்.விஸ்வநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ராமநாதபுரம் நகராட்சியின் ஆணையராக இருந்த கே.சுப்பையா பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே இந்நகராட்சியானது சிறப்பு நிலை நகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. ஆகவே சிறப்பு நிலை நகராட்சிக்குரிய அதிகாரியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
இந்தநிலையில், ராமநாதபுரம் நகராட்சி ஆணையராக இருந்த கே.சுப்பையா திடீரென செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அத்துடன் கோவையில் நகராட்சி பயிற்சிப் பள்ளியில் அதிகாரியாக இருந்த என்.விஸ்வநாதன் ராமநாதபுரம் சிறப்பு நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். 
புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையர் என்.விஸ்வநாதன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் புதன்கிழமை காலையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை நகராட்சி பொறியாளர், நகர்நல அலுவலர், ஊழியர்கள் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பொறுப்பேற்ற பின் ஆணையர் என்.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சியில் மக்கள் நலனை முன்வைத்து, திட்டங்கள் செயல்படுத்தப்படும். கள ஆய்வின் மூலம் நகரின் முக்கிய தேவைகளை அறிந்து அதை சீர்படுத்த முன்னுரிமை அளிப்பேன். 
ராமநாதபுரத்தில் குடிநீர் விநியோகம் சீராக இருந்தாலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு குடிநீர் விநியோகிக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரியத்திடமிருந்து தண்ணீர் பெறப்படும். சுகாதாரப் பணிகள் சீராக நடந்துவரும் நிலையில், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com