ராமநாதபுரத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கேணிக்கரை சாலை சந்திப்பில் தனியார் மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவண காந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பெண்கள் உள்பட 300 பேருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் மேகநாதன், ஆதி திராவிடர் அணி ராஜசேகர், கணேசமூர்த்தி, மகளிரணி முன்னாள் மாவட்ட தலைவி சரோஜா தேவி, மகளிரணி நகர் நிர்வாகி சிவகாமி தேவி, விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பரமக்குடி: பரமக்குடி, எமனேசுவரம் பகுதிகளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  
 பரமக்குடி ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை நலச் சங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு அதன் தலைவர் என்.ஆர்.நாராயணன் தலைமை வகித்தார். சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.ஓ.ஆர்.செந்தாமரை கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் ஆர்.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவையொட்டி ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.  
எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ்   துணைத் தலைவர் ஏ.பி.மகாதேவன் தலைமை வகித்தார். மாவட்ட கைத்தறி தொழிற்சங்க தலைவர் ஏ.எம்.நாகராஜன் முன்னிலை வகித்தார். மாநில நெசவாளர் அணி செயலாளற் டி.ஆர்.கோதண்டராமன் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com