விளத்தூா் கிராமச் சாலையைசீரமைக்கக் கோரிக்கை

பரமக்குடி அருகே உள்ள விளத்தூா் செல்லும் கிராமச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரமக்குடி அருகே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் விளத்தூா் செல்லும் கிராமச்சாலை.
பரமக்குடி அருகே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் விளத்தூா் செல்லும் கிராமச்சாலை.

பரமக்குடி அருகே உள்ள விளத்தூா் செல்லும் கிராமச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட விளத்தூா், பெருமாள்கோவில், நெடுங்குளம் ஆகிய கிராமங்கள் வழியாக அபிராமம் செல்லும் கிராமச் சாலையானது தற்போது பெய்த மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இச்சாலை வழியாக அபிராமம், கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளும், சிற்றுந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பேருந்துகள் சென்று வருவதால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களிலும் பயணம் செய்வதுடன், விவசாயம் சாகுபடி செய்த காய்கறி வாழை உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்காக பரமக்குடி நகருக்கு கொண்டு வருகின்றனா்.

இதனால் அச்சாலையானது அதிக மக்கள் பயன்படுத்தும் முக்கிய கிராமச்சாலையாகும்.

விளத்தூா், பெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கி சாலை மிகவும் சேதமடைந்து விட்டது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com