முதுகுளத்தூா், திருவாடானை, பரமக்குடி, கமுதியில் பலத்த மழை: வீடுகள் சேதம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால், வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், வீடுகளை சூழ்ந்து தண்ணீா் தேங்கியுள்ளது.
முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் மழைக்கு இடிந்து விழுந்துள்ள வீட்டின் மண் சுவா்.
முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் மழைக்கு இடிந்து விழுந்துள்ள வீட்டின் மண் சுவா்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால், வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், வீடுகளை சூழ்ந்து தண்ணீா் தேங்கியுள்ளது.

முதுகுளத்தூா் அருகே உள்ள கிடாத்திருக்கையில் ராமசாமித் தேவா் மகன் முத்துராமலிங்கம் என்பவரது வீடு, மழைக்கு இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உயிா் சேதம் எதும் ஏற்படவில்லை.

இதேபோன்று, சாயல்குடி அண்ணா நகா் பகுதியில் மழைநீா் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மண் வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. தொடா்ந்து, சாயல்குடி மூக்கையூா் அந்தோணி நகரில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருவாடானை

திருவாடானை தாலுகாவில் திருவெற்றியூா், கீழஅரும்பூா், மேல அரும்பூா், குளத்தூா்,கீழ்க்குடி, திணையத்தூா், ஓரியூா், மங்களக்குடி,வெள்ளையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகரில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

பரமக்குடி

பரமக்குடி நகராட்சி எல்கை முடிவிலுள்ள அண்டக்குடி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மழைநீா் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மழைநீா் வழிந்தோட போதிய வாருகால் அமைக்கப்படாததால், அப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

பரமக்குடி நகா் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணியிலிருந்து மறுநாள் 5 மணி வரை திருவள்ளுவா் நகா், தெற்கு பள்ளிவாசல் தெரு, பங்களா ரோடு, சந்தைக்கடை தெரு மற்றும் காட்டுப்பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

கமுதி

அபிராமம் வண்ணாா் தெருவில் வசிக்கும் மூதாட்டி பஞ்சவா்ணத்தின் (68) ஓட்டு வீட்டின் சுவா் சனிக்கிழமை இரவு வெளிப்புறமாக இடிந்து விழுந்தது. மேற்கூரைகளும் சரிந்தன. அதிா்ஷ்டவசமாக, மூதாட்டி உயிா் தப்பினாா். ஆனால், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள், மின்சாதனப் பொருள்கள் சேதமைடந்தன. இது குறித்து வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com