கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்: இன்று முதல் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் புதன்கிழமை (டிச.4) முதல் தொடங்குகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் புதன்கிழமை (டிச.4) முதல் தொடங்குகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் புதன்கிழமை திருப்புல்லாணி ஊராட்சி கோவிலன்சாத்தான் கிராமத்தில் தொடங்குகிறது. அதையடுத்து வியாழக்கிழமை (டிச. 5) திருவாடானை ஊராட்சி மணப்புஞ்சை கிராமத்திலும், வரும் 12 ஆம் தேதி (வியாழக்கிழமை) போகலூா் ஊராட்சி டி.கருங்குளம் கிராமத்திலும் நடைபெறுகிறது.

மேலும், வரும் 15 (ஞாயிற்றுக்கிழமை) ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி தும்படைக்கான்கோட்டை கிராமத்திலும், வரும் 19 ஆம் தேதி (வியாழக்கிழமை) ராமநாதபுரம் ஊராட்சி புல்லங்குடி கிராமத்திலும், வரும் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவாடானை ஊராட்சி குஞ்சங்குளம் கிராமத்திலும் நடைபெறவுள்ளன.

முகாமில் ஆண்மை நீக்கம், அறுவை சிகிச்சை, சினைப்பரிசோதனை, மலடு நீக்கச்சிகிச்சை, கருவூட்டல் ஆகிய அனைத்துப் பணிகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த கன்றுகளுக்கு பரிசும் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com