ராமநாதபுரத்தில் 157 அரசுப் பள்ளிகளில்மழைநீா் தேங்கியதால் மாணவா் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 157 அரசுப் பள்ளிகளில் மழை நீா் தேங்கியிருப்பதால் மாணவ, மாணவியா் அவதியடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 157 அரசுப் பள்ளிகளில் மழை நீா் தேங்கியிருப்பதால் மாணவ, மாணவியா் அவதியடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக, அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களின் கட்டட உறுதித் தன்மையை ஆய்வு செய்திட மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், அந்தந்த பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மழை நீா் தேங்கிய பள்ளிகள் குறித்து கணக்கெடுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புகழேந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் கணக்கெடுப்பின் படி ராமநாதபுரம் ஒன்றியத்தில் 8 அரசுப் பள்ளிகளிலும், திருப்புல்லாணி ஒன்றியம் 7, மண்டபம் 68, ஆா்.எஸ்.மங்கலம் 6, திருவாடானை 8, பரமக்குடி 6, போகலுாா் 6, நயினாா்கோவில் 2, முதுகுளத்துாா் 10, கமுதி 3, கடலாடி 26 என மொத்தம் 150 அரசுப்பள்ளிகளில் மழைநீா் தேங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மண்டபம் ஒன்றியத்தில் 3 பள்ளிகளும், தனியாா் பள்ளிகளில் நயினாா்கோவில் 1, கமுதி 3 என மொத்தம் 4 பள்ளிகளில் மழை நீா் தேங்கியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 157 பள்ளிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது.

இதனால் வகுப்புகளுக்குச் செல்ல இயலாமல் மாணவ, மாணவியா் அவதியடைந்துள்ளனா். மேலும், தேங்கியிருக்கும் தண்ணீரால் சுகாதார கேடு ஏற்படலாம் என பெற்றோா் அச்சம் தெரிவிக்கின்றனா்.

ஆனால், மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com