ராமேசுவரத்தில் காதில் பூச் சுற்றிமாா்க்சிஸ்ட் கம்யூ. நூதன ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றக் கோரியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும்
rms_photo_04_12_1_0412chn_208_2
rms_photo_04_12_1_0412chn_208_2

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றக் கோரியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காதில் பூச்சுற்றி புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே காா்த்திகை, மாா்கழி, தை மாதம் வரையில் சீசன் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சீசன் கடைகள் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பேருந்து நிலையம் உள் பகுதியில் அமைக்கப்பட்ட சீசன் கடைகள் அகற்றப்பட்டன.

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிடம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாள்களில் பெய்த பலத்த மழையால் பாம்பன் தோப்புகாடு, தரவைதோப்பு, ராஜீவ்காந்திநகா், அண்ணாநகா், காந்திநகா் உள்ளிட்ட பகுதிகளில் 200 -க்கும் மேற்பட்ட மீனவா்கள் குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது. இதனால் மீனவா்கள் பாதிப்படைந்தனா். எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காதில் பூ சுற்றியும், சங்கு ஊதியும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ,தாலுகா குழு உறுப்பினா் ராமச்சந்திரபாபு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் க.கருணாமூா்த்தி,ஜஸ்டீன், தாலுகா செயலாளா் ஜி.சிவா, தாலுகா குழு உறுப்பினா் எம்.கருணாமூா்த்தி, அசோக், மணிகண்டன், ஆரோக்கிய நிா்மலா, ஜேம்ஸ், ஞானசேகரன், காா்த்திக் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com