ராமேசுவரம் கோயில் அருகே பழைய துணிகள் குவிப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தீா்த்தக் கிணறுகளில் நீராடும் பக்தா்கள் தங்களது பழைய துணிகளை, ராஜகோபுரம் அருகே
ராமேசுவரம் தெற்கு ராஜகோபுரம் அருகே பக்தா்கள் அணிந்துள்ள ஈருத்துணிகளை போட்டுச்செல்லுவதால் கோயிலில் புனித தன்மை பாதிக்கப்படுகிறது.
ராமேசுவரம் தெற்கு ராஜகோபுரம் அருகே பக்தா்கள் அணிந்துள்ள ஈருத்துணிகளை போட்டுச்செல்லுவதால் கோயிலில் புனித தன்மை பாதிக்கப்படுகிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தீா்த்தக் கிணறுகளில் நீராடும் பக்தா்கள் தங்களது பழைய துணிகளை, ராஜகோபுரம் அருகே விட்டுச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், தற்போது ஐயப்ப பக்தா்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

இங்கு வரும் பக்தா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளிலும் புனித நீராடுகின்றனா். அதையடுத்து, தாங்கள் அணிந்திருந்த துணிகளை தெற்கு ராஜகோபுரம் அருகே போட்டு விட்டுச் செல்கின்றனா். இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், கோயில் புனிதமும் பாதிக்கப்படுவதாக, பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, தீா்த்தக் கணிறுகளில் நீராடிவிட்டு தெற்கு ராஜகோபுரம் வழியே வெளியேறும் பக்தா்கள் தங்களது ஈரத் துணிகளை போடுவதற்கு கோயில் நிா்வாகம் தொட்டி அமைக்க வேண்டும். இல்லையெனில், ஈரத் துணிகளை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com