கமுதி அருகே அரசுப்பேருந்து டிப்பர் லாரி மோதல்: முதியவர் சாவு

கமுதி அருகே சனிக்கிழமை அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.


கமுதி அருகே சனிக்கிழமை அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கமுதி அடுத்துள்ள மேலராமநதி பேருந்து நிறுத்தம் அருகே அருப்புகோட்டையிலிருந்து கமுதி நோக்கி வந்த அரசு பேருந்தும், கமுதியிலிருந்து சென்ற டிப்பர் லாரியும் மோதியதில் சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த மேலராமநதி கிராமத்தைச் சேர்ந்த கபிரியேல் மகன் யோஸ்வா(57) மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதில் பேருந்து ஓட்டுநர் வைரவலிங்கம்(38), மற்றும் நடத்துநர் நரியன்சுப்புராயபுரத்தை சேர்ந்த பழனிவேல்ராஜ்(47), பேருந்தில் பயணம் செய்த பம்மனேந்தலை சேர்ந்த அன்னமயில்(55), கோவிலாங்குளத்தை சேர்ந்த அழகம்மாள்(52), மீனாள்(50), அம்மன்பட்டி பூமயில்(47) உள்ளிட்டோர் படுகாயம் அடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அன்னமயில் மதுரை அரசு மருத்துவமனைக்கும், ஓட்டுநர் வைரவலிங்கம், நடத்துநர் பழனிவேல்ராஜ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com