திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.20) நடைபெறுவதை முன்னிட்டு சிமென்ட் சாலை அமைக்கும் பணி


ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.20) நடைபெறுவதை முன்னிட்டு சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி கோயில் உள்ளது. 
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சித்திரை மாதம் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இக்கோயில் தேரோட்டம் பழமையான சப்பரம் ஒன்றில் சுவாமி அம்மன் தேரோட்டம் நடைபெறும். இதனால் பக்தர்கள் புதிய தேர் ஒன்றை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து கிராம பொதுமக்களால் ரூ.50 லட்சம் செலவில் புதிய மரத் தேர் செய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.20) புதிய தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட உள்ளது. 
இதனையொட்டி தேர் வெள்ளோட்டம் செல்வதற்காக, கீழ ரத வீதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்து ரூ. 18.5 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com