பரமக்குடி தொகுதியில் இன்று டிடிவி.தினகரன் சுற்றுப் பயணம் தொடக்கம்

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக துணை பொதுச்செயலர் டிடிவி.தினகரன், ஞாயிற்றுக்கிழமை முதல் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.


பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக துணை பொதுச்செயலர் டிடிவி.தினகரன், ஞாயிற்றுக்கிழமை முதல் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் டிடிவி தினகரன், சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர், பரமக்குடி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 20) சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறார். கமுதியில் அமமுக வடக்கு ஒன்றிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அபிராமம், செய்யமாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். திங்கள்கிழமையும் அவர் பரமக்குடி தொகுதியில் சுற்றுப்பயணத்தை தொடர்கிறார். இதற்காக, பரமக்குடி தொகுதி முழுவதும் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com