ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தண்ணீர்


ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு காவிரி கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுமார் ரூ.616 கோடியில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், ராமநாதபுரம் நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக கூட்டுக்குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 
மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டிருப்பதாக ஏற்கெனவே புகார் எழுந்தது. இந்நிலையில் தேவிப்பட்டினம் சாலையில் புல்லங்குடி விலக்கு அருகே ராமநாதபுரம் நகராட்சிக்கு வரும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. 
இதனால், ராமநாதபுரத்தில் பல பகுதிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.கூட்டுக்குடிநீர் குழாய் வரும் வழியில், தனியார் ஒருவர் கரிமூட்டம் போடுவதற்காக குழாயை உடைத்து தண்ணீரைத் தேக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். 
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கூட்டுக்குடிநீர் திட்டத்தில் காற்று செல்வதற்காக மேலே நீட்டியவாறு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
ஆனால், அக்குழாயை சிலர் கழற்றிவிடுவதால் தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. இதுபோன்று குழாயைக் கழற்றுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com