இலங்கையில் மீட்கப்பட்ட 9 விசைப்படகுகள் ராமேசுவரம் வந்தடைந்தன

இலங்கையில் மீட்கப்பட்ட 9 விசைப்படகுகளை மீட்புக் குழுவினர் ராமேசுவரம் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவந்தனர்.

இலங்கையில் மீட்கப்பட்ட 9 விசைப்படகுகளை மீட்புக் குழுவினர் ராமேசுவரம் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவந்தனர்.
 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 9 விசைப்படகுகளை மீட்க கடந்த 17 ஆம் தேதி விசைப்படகுகள் மீட்புக் குழுவினர் இலங்கை சென்றனர்.
 அங்குள்ள காரை நகர் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய நிலையில் இருந்த 9 விசைப்படகுகளை சனிக்கிழமை மீட்டனர். பின்னர் அவற்றை கயிறு மூலம் கட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ராமேசுவரம் துறைமுகத்துக்கு இழுத்து வந்தனர்.  மீட்டுவரப்பட்ட 9 விசைப்படகுகளின் இயந்திரம், புரொப்பலர் உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் சேதமடைந்துள்ளதால், ஒரு விசைப்படகை சீரமைக்க ரூ. 7 லட்சம் வரை செலவாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கினால் மட்டுமே படகுகளை சீரமைத்து மீண்டும் பயன்படுத்த முடியும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்ட மீட்பு குழுவினர் இலங்கை பயணம்: இந்நிலையில்,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகளை மீட்க மண்டபம் துறைமுகத்தில் இருந்து 5 விசைப்படகுகளில் 21 மீனவர்கள் இலங்கை காரை நகர் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் புறப்பட்டனர். சர்வதேச கடல் எல்லை வரை இந்திய கடலோர காவல்படையினர் உடன் சென்று, இலங்கை கடற்படையினரிடம் மீட்புக் குழுவினரை ஒப்படைத்தனர். இக்குழுவினர் இரண்டு நாள்கள் அங்கு தங்கி 5 விசைப்படகுகளை மீட்டு தமிழகம் கொண்டுவர உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com