செவ்வூர் பகுதி மக்கள் குடிநீர் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

போகலூர் ஊராட்சிக்குள்பட்ட செவ்வூர் கிராம மக்கள் குடிநீர் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர்.

போகலூர் ஊராட்சிக்குள்பட்ட செவ்வூர் கிராம மக்கள் குடிநீர் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர்.
 இதுகுறித்து அவர்கள் செவ்வாய்க்கிழமை கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட செவ்வூரில் வடக்குப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். ஆனால், போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் வைகை ஆற்றில் குழி தோண்டி அதில் ஊறும் தண்ணீரை சேகரித்தே குடிக்கவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
 தற்போது கடும் வறட்சி நிலவுவதால் வைகை ஆற்றிலும் தண்ணீர் ஊறுவது நின்று விட்டது. இதனால், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு அலைந்து காவிரி கூட்டுக்குடிநீர் பெறும் நிலை உள்ளது. ஆகவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் இணைப்பை செவ்வூர் வடக்குப் பகுதிக்கு செயல்படுத்த வேண்டும் எனக் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com