ராமநாதபுரத்தில் உலக ரத்த தான தினம் அனுசரிப்பு

உலக ரத்ததானத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை ரத்ததானம் வழங்கினர். 


உலக ரத்ததானத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை ரத்ததானம் வழங்கினர். 
கல்லூரி வளாகத்தில்  நடந்த ரத்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து வந்திருந்த மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 
இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், கல்லூரி அலுவலர்கள் உள்ளிட்டோர் ரத்ததானம் வழங்கினர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் உலக ரத்ததான தினம் நடைபெற்றது. இம்முகாமையும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தொடக்கிவைத்தார். இதில் அதிக முறை ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. 
திருவாடானை: சோழாந்தூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் ரத்த வங்கி சார்பில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அருள்ராஜ் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட செவிலியர் பிரியதர்ஷினி மற்றும் நந்தினி ஆகியோர்  ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து  பேசினர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளியின்  ஜூனியர் ரெட்கிராஸ் பொறுப்பாசிரியர் சுல்தான் ஜமீர் அலி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com