கீழத்தூவல் கிராமத்தில் எருதுகட்டு
By DIN | Published On : 14th June 2019 07:52 AM | Last Updated : 14th June 2019 07:52 AM | அ+அ அ- |

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு வியாழக்கிழமை எருதுகட்டு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிராமத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்காக விளாங்காட்டூர், நந்தகோட்டை, காஞ்சிரங்குடி, கீழத்தூவல், சிங்கபுளியாபட்டி, மூவலூர், குடும்புளி, தேவகோட்டை, அம்மன்பட்டி உள்பட 12 இடங்களில் இருந்து 28 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் காளைகளை அடக்கியவர்களுக்கு கிராமத்தின் சார்பாக ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.