திருவாடானையில் வருவாய் தீர்வாயம் ஜூன் 19 இல் தொடக்கம்

திருவாடானை தாலுகா முழுவதும் கிராம வாரியாக ஜூன் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது. 

திருவாடானை தாலுகா முழுவதும் கிராம வாரியாக ஜூன் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது. 
இதுகுறித்து திருவாடானை வட்டாட்சியர் சேகர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: 
திருவாடானை தாலுகா முழுவதும் உள்ள நான்கு பிர்காவை சேர்ந்த 50 வருவாய் கிராமங்களுக்கு திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாயத்தில் அந்தந்த கிராம மக்கள் தங்களது குறைகளை புகார் மனுக்களைக் கொடுக்கலாம்.
அதன்படி வரும் 19 ஆம் தேதி மங்கலக்குடி பிர்கா உள்வட்டத்தை சேர்ந்த நெய் வயல், துத்தாக்குடி, பழங்குளம், நீர் குன்றாம், கட்ட வளாகம், காவனூர், மங்கலக்குடி, சிறுமலை கோட்டை, கட்டி மங்கலம், பனிச்சகுடி, சித்தா மங்கலம், கடம்பூர் ஆகிய கிராமத்தை சேர்ந்தவர்களும், 20 ஆம் தேதி நிலமழகிய மங்கலம், சிறுகம்பையூர், ஓரியூர், மருங்கூர், புள்ளூர், ஆக்களூர், நகரி காத்தான், மல்லனூர், வட்டாணம், கலிய நகரி, மச்சூர், கொடிபங்கு, ஓடவயல், எம்.ஆர். பட்டினம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும், 21 ஆம் தேதி தொண்டி பிர்காவை சேர்ந்த  தேளூர், கருங்காலக்குடி, வேலங்குடி, தொண்டி, சின்ன தொண்டி, தளிர்மருங்கூர், காடாங்குடி, பட்டமங்கலம், குளத்தூர், திருவொற்றியூர், கடம்பனேந்தல், முகிழ்த்தகம், நம்புதாளை, கானாட்டாங்குடி, புதுப்பட்டினம், ஆமணக்குடி, ஆதியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும், 25 ஆம் தேதி திருவாடானை உள்வட்டத்தைச் சேர்ந்த தோட்டா மங்கலம், திருவாடானை, அரசூர், ஆட்டூர், பாரூர், ஒளிக்கோட்டை, டி நாகினி, இளையதான்வயல், பாண்டுகுடி, கிளியூர், அஞ்சுகோட்டை, கடம்பங்குடி, மாவூர், ஆதியூர் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com