ஆர் .எஸ். மங்கலம் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்
By DIN | Published On : 23rd June 2019 12:39 AM | Last Updated : 23rd June 2019 12:39 AM | அ+அ அ- |

ஆர் .எஸ். மங்ககலம் அருகே தும்படாகோட்டை ஊராட்சி பொன்மாரி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஊரக வளர்ச்சி துறை துணை மண்டல அலுவலர் சண்முகவேலு தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முன்னிலை வகித்தார். இதில், மழை நீர் சேமிப்பு, நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்மாய் தூர்வாருதல், ஊருணி பராமரிப்பு , ஆழ்துளை கிணறு அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பரப்புரையை அரசே மேற்கொள்ளுதல், ஆகியவற்றை தீர்மானமாக பதிவு செய்ய கோரிக்கை விடப்பட்டது.
இதில், இருவன்பச்சேரி கிராம மக்கள் பாதை இளைஞர்கள் ரகுபதி, பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டு கிராமத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகளிடம ஒருமனதாக கோரிக்கை விடுத்தனர்.