நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை குறைத்து வழங்குவதாக பெண்கள் புகார்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ராநாதபுரம் மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மிகவும் குறைந்தளவு ஊதியம் வழங்கப்படுவதாகக்

ராநாதபுரம் மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மிகவும் குறைந்தளவு ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி, சிறுதாலை ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், சிறுதாலை ஊராட்சியிலுள்ள வாத்தியனேந்தல், பனையடினேந்தல் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், தங்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தில் தினக் கூலியாக ரூ.30 வழங்கப்படுவதாகக் கூறி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 
மேலும், இக்கிராமத்தில் காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், இதனால் குடம் நீர் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை கொடுத்து வாங்குவதாகவும் பெண்கள் கூறினர். 
அதேபோல், சாலை, மின்விளக்கு என எந்த அடிப்படை வசதியும்  செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினர். 
இது குறித்து ஆட்சியரை நேரில் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர்.  இதேபோல், திருப்புல்லாணி ஒன்றியம் நல்லிருக்கை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. திறந்தவெளி கிணறு அருகே அங்கன்வாடி இருந்தும் அதை சீர்படுத்தவில்லை எனக் கூறி மனு அளித்தனர்.
காரேந்தல் ஊராட்சியிலுள்ள குமரியேந்தல் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் ரூ.3.65 கோடி மதிப்பிலான சாலைப் பணியானது, ஒப்பந்த தேதி முடிவடைந்த பிறகும் முடிக்கப்படாமல் உள்ளது என்றும், மேலும் தரமற்று அமைக்கப்படும் சாலை குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறி, ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்தனர். கொடிக்குளம் பகுதி விவசாயிகள் 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்று கோரி மனு அளித்தனர். 
பரமக்குடி பகுதியிலுள்ள பாம்பு விழுந்தான் கிராமத்து மக்கள், கோயில் பகுதியில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கடையை வேறு பகுதிக்கு மாற்றக் கோரி மனு அளித்தனர்.
சாயல்குடி பகுதி அண்ணா நகர் வட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் போதிய கட்டட வசதியையும், ஆசிரியர்களையும் நியமிக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி, ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்தனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள மரைக்காயர்பட்டணத்தில் மின்பற்றாக்குறை உள்ளதால், புதிய மின்மாற்றி அமைத்து அப்பகுதியில் சீராக மின்விநியோகம் செய்யவேண்டும் எனக் கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பில் செய்யது அலிகான் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com