ராமேசுவரத்தில் பொருள்கள் வைப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்: ஊழியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொருள்களை பாதுகாப்பு அறையில் வைக்க கூடுதல்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொருள்களை பாதுகாப்பு அறையில் வைக்க கூடுதல் கட்டணம் வசூல் செய்த ஊழியருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து இணை ஆணையர் எஸ்.கல்யாணி செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பக்தர்கள் செல்லிடப்பேசி, பை உள்ளிட்ட எந்த பொருள்களையும் கோயிலுக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கண்காணிக்க காவல் துறையினர் "மெட்டல் டிடேக்டர்' கருவி மூலம் சோதனை செய்ய பின்னரே பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர். இதனால் பக்தர்கள் கொண்டு வரும் பொருள்களை பாதுகாப்பாக வைத்து செல்லும் வகையில் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக் கட்டணமாக ரூ. 10 வசூல் செய்யப்படுகிறது. 
   இந்நிலையில், கிழக்கு ரத விதியில் உள்ள பாதுகாப்பு அறையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கோயில் இணை ஆணையர் எஸ்.கல்யாணிக்கு புகார்கள் வந்தன. 
இதையடுத்து அங்கு செவ்வாய்க்கிழமை அவர் ஆய்வு செய்த போது,  பக்தர்களிடம் ரூ. 10 வசூலிப்பதற்குப் பதிலாக ரூ. 50 வசூலித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியர் அழகர்சாமிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com